• கந்துவட்டிக்கு கடன் வாங்கியவரின் வீடு, இடித்து தரைமட்டம்..!
 • வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்: அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை
 • ரஷ்யாவுடனான ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் முறிந்த நிலையில், மிக முக்கியமான ஏவுகணை சோதனையை நடத்தியது அமெரிக்கா
 • சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ஹீரோ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
 • நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை என புகார்
 • அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்த போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது

தமிழ்நாடு

 • கந்துவட்டிக்கு 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியவரின் வீடு - இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட சம்பவம்

  மதுரையில் கந்துவட்டிக்கு 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியவரின் வீடு, பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  மதுரை சிங்கம்பிடாரி கோவில் தெருவை சேர்ந்த குமார், தனது மனைவி, 3 பெண் குழந்தைகள் மற்றும் தாயாருடன் சொந்த வீட்டில் வசித்து வந்தார். இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பாக மதிமுக கட்சி பிரமுகர் நாகராஜன் என்பவரிடம், 5 பைசா வட்டிக்கு 2 லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார். இதற்கான அசல் மற்றும் வட்டியை சரியாக செலுத்தி வந்த நிலையில், குடும்ப சூழல் காரணமாக பணத்தை செலுத்த ஒரு ஆண்டு அவகாசம் கேட்டுள்ளார்.

  இந்நிலையில் குமாருக்கு வேலை தருவதாக தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதை நம்பி அவர் தூத்துக்குடி சென்றிருந்த சமயத்தில் 15 பேர் கொண்ட கும்பலுடன் வந்த நாகராஜ், வீட்டிலிருந்த குமாரின் தாயாரை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டு, பொருட்களை சாலையில் வீசிவிட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டை இடித்து தள்ளியுள்ளார்.

  தகவலறிந்து ஊருக்கு வந்த குமார், வீட்டின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின்பேரில் நாகராஜன் மீது தற்போது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கந்துவட்டிக்கு கடன் வழங்குவது தண்டனைக்குரிய குற்றம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  [...]
 • உள்ளாட்சித் தேர்தலில் திமுக - வேட்பாளர்கள் வெளியிட்டுள்ளது.பட்டியல்
 • சென்னையில் - அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

இந்தியா

வணிகம்

உலகம்

சினிமா

பொது செய்திகள்

 • நித்யானந்தா

  தலைமறைவாக உள்ள நித்யானந்தாவால் தமது மகள்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியுள்ள ஜனார்தன சர்மா, நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் பலாத்காரம் போன்ற கொடுமைகளுக்கு ஆளாவதாக புகார் அளித்துள்ளார்.

  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டு சிறுவர்களை அடைத்து வைத்து குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தியதாக நித்யானந்தா ஆசிரம் மீது புகார் எழுந்தது. சிறுவர்களை வைத்து ஆசிரமத்திற்கு நிதி திரட்டியதாகவும், அப்போது சிறுவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும் நித்யானந்தாவின் பெண் சீடர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் குழந்தைகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்தது உள்ளிட்ட புகார்களில் நித்யானந்தா மீதும் அகமதாபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் தான் எங்கும் தப்பிச் செல்லவில்லை என்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு நித்யானந்தா விளக்கம் அளித்தார்.

  இதனிடையே நித்யானந்தா ஆசிரமத்தில் அடைபட்டிருக்கும் தமது மகள்களை மீட்டுத் தரக்கோரி ஜனார்தன சர்மா என்பவர் புகார் அளித்திருந்தார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜனார்தன சர்மா, பெங்களூரில் நித்யானந்தாவின் குருகுலத்தில் தமது மூன்று மகள்களையும் மகனையும் சேர்த்ததாகவும் தானும் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். நித்யானந்தாவுடன் சுற்றுப்பயணத்திற்கு தமது மகள்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறிய சர்மா, அதன்பின்னர் தமது மூத்த மகள் திரும்பவில்லை என புகார் தெரிவித்துள்ளார்

  அவரை சந்திக்க அனுமதிக்காததால் போலீசில் புகார் அளித்ததாக தெரிவித்த ஜனார்தன சர்மா, ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக தமது மகள்கள் கூறியதாக தெரிவித்துள்ளார். தமது மகள்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவர்களை மீட்டுத் தரவேண்டும் என்றும் ஜனார்தன சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

  [...]
 • டிக்டாக்
 • தற்கொலை